ஓய்வு பெறுகிறார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி! குவைத் அணியுடன் கடைசி போட்டி!

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி கொல்கத்தாவில் குவைத்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்திற்குப் பிறகு சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sunil Chhetri retires from international football, game against Kuwait going to be his last for India sgb

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி கொல்கத்தாவில் குவைத்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்திற்குப் பிறகு சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான சேத்ரி தனது முடிவை சமூக ஊடக கணக்குகளில் வெளியிட்ட வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

இந்தியா தற்போது குரூப் ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் கத்தாரை பின்னுக்குத் தள்ளி, நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. குவைத் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டி ஜூன் 6ஆம் தேதி நடக்க உள்ளது.

"கடந்த 19 ஆண்டுகளில் நான் நினைவுகூருவது கடமை, அழுத்தம் மற்றும் அபரிமிதமான மகிழ்ச்சி ஆகியவற்றின் மிக அருமையான கலவையாகும்" என்று சேத்ரி கூறியுள்ளார்.

பெண்களுக்கு மோடியின் கேரண்டி! அனைத்து பெண்களுக்கும் வருடம் ரூ.50,000 வழங்கும் சுபத்ரா யோஜனா!

"நாட்டுக்காக நான் விளையாடிய போட்டிகளில் என்ன செய்திருக்கிறேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இப்போது நான் என்ன நல்லது செய்தேன், என்ன கெட்டது செய்தேன் என்று திரும்பிப் பார்த்தேன். இதனால் கடந்த ஒன்றரை மாதங்கள் மிக விசித்திரமாக இருந்தன. அடுத்த ஆட்டம் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று முடிவு செய்திருப்பதால், நான் அதை நோக்கிச் சிந்திக்கிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

"குவைத்துக்கு எதிரான ஆட்டம் நெருக்கடியானது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற எங்களுக்கு மூன்று புள்ளிகள் தேவை. அது மிகவும் முக்கியமானது" என்றும் கேப்டன் சுனில் சேத்ரி கூறினார்.

சேத்ரி மார்ச் மாதம் இந்தியாவுக்காக தனது 150வது போட்டியில் ஆடினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த போட்டியில் கடைசி கோல் அடித்தார். ஆனால் அந்த ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

2005ஆம் ஆண்டில் இந்தியக் காலபந்து அணியில் அறிமுகமான சுனில் சேத்ரி, இந்திய அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார். இந்தியாவுக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையும் சுனில் சேத்ரி ஓய்வுபெற உள்ளார். அதுமட்டுமின்றி, இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி இருவருக்கும் அடுத்தபடியாக அதிக கோல் அடித்தவர் சுனில் சேத்ரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோடையில் கல்லா கட்டும் கேன் வாட்டர் பிசினஸ்! சென்னையில் தினமும் 30 மில்லியன் லிட்டர் விற்பனை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios