Asianet News TamilAsianet News Tamil

Bala : பீல்ட் அவுட்டான பூஜா.. ஜஸ்ட் மிஸ்சில் தப்பிய இவானா.. இயக்குனர் பாலாவால் டார்ச்சருக்கு உள்ளான 5 நடிகைகள்

Director Bala : இயக்கம் என்று வரும்போது இயக்குனர் பாலாவிற்கு ஒரு தனி அந்தஸ்த்து உண்டு. அவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல், ஒரு தனி உலகம் என்று உருவாக்கி அதில் பயணித்து வருகின்றார். அதே போல அவருடைய படங்களை பலவற்றை பார்க்கவே ஒரு தனி தைரியம் வேண்டும்.

Actress Pooja Umashankar to actress ivana top 5 actress struggled while acting in bala movies ans
Author
First Published Apr 25, 2024, 10:12 AM IST

தமிழ் திரையுலகில் இயக்குனர் பாலா பயணிக்க தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், அவர் இயக்கியுள்ள திரைப்படங்கள் வெறும் 10 தான். ஆனால் அந்த ஒவ்வொரு திரைப்படமும் ஒரு தனி உணர்வை பிரதிபலிக்கும் படங்களாவே இருந்து வருகின்றது. அதே நேரம் அவர் தனது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை மன மற்றும் உடல் ரீதியாக பல்வேறு சங்கடங்களை அனுபவிக்க வைப்பார் என்பதும் பலர் அறிந்ததே. 

பல இயக்குனர் பாலாவின் முரட்டுத்தனமான இயக்கம் குறித்து மனம் திறந்துள்ளார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பெண்ணாக வலம்வந்த பூஜாவை முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க வைத்திருப்பார் பாலா. அதுவரை பல படங்களில் மின்னிய பூஜா, நான் கடவுள் படத்திற்கு பிறகு பீல்ட் அவுட் ஆனார். இப்போது வரை படங்கள் நடிக்கின்றார் என்றாலும், அவருக்கு பெரிய அளவில் மவுசு இல்லை. 

Manjummel Boys : போட்ட 7 கோடியும் போச்சு.. என்ன ஏமாத்திட்டார் - Manjummel Boys தயாரிப்பாளர் மீது பகீர் புகார்!

தமிழ் திரையுலகில் கிளாமராக பல படங்களில் நடித்து இளசுகளை ஈர்த்தவர் தான் நடிகை வேதிகா. ஆனால் பரதேசி படத்திற்கு பிறகு பெரிய அளவில் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. வெள்ளை நிறத்தில் இருந்த வேதிகாவை, சற்று கருமையான நிறத்திற்கு மாற்ற, பல நாள் வெயிலில் நிற்க சொல்வாராம் இயக்குனர் பாலா. அந்த படத்தில் நடிகர் அதர்வா, பாலாவிடம் வாங்கிய அடிகள் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம். 

அதே நிலை தான சாய் தன்ஷிகாவிற்கும் ஏற்பட்டது, ஓரளவு நல்ல பல படங்களில் நடித்த சாய் தன்ஷிகாவும், பரதேசி படத்தில் பாலாவின் கடுமையாக இயக்கத்தில் சிக்கியவர்களில் ஒருவர். நேர்த்தியான ஒரு கட்சிக்காக எந்தவித உச்சத்திற்கு செல்லும் இயக்குனர் பாலா என்பதை நிரூபித்த ஒரு படம் தான் பரதேசி. பாலாவிற்கு அதிக விருதுகளை பெற்றுத்தந்த படமும் அது தான். 

ப்ரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜூ தான் முதலில் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்துவந்தார். அப்போது அந்த படத்தின் ஹீரோ சூர்யா. ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சூர்யாவும், மமிதாவும் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். மமிதா, வணங்கான் படப்பிடிப்பில் சில முறை பாலாவிடம் அடிகூட வாங்கியதாக கூறினார். 

இளம் வயதில் மலையாள மொழியில் நடிக்க துவங்கிய இவானா, தமிழில் நாச்சியார் படம் மூலம் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது வெறும் 18, ஆனால் அந்த வயதிற்கு மீறிய கதாபாத்திரம் தான் நாச்சியார் படத்தில் அவர் ஏற்று நடித்தது. பல சங்கடங்களை ஏற்று தான் இவானா அந்த படத்தில் நடித்திருந்தார். ஆனால் லவ் டுடே படம் அவருடைய திரைப்பயணத்தை முற்றிலும் மாற்றியுள்ளது.  

10 ஆயிரம் கோடி சொத்துக்களா? 3 ஹீரோஸ், ஒரு நடிகை, ஒரு பாடகி அடங்கிய கோலிவுட்டின் பணக்கார பேமிலி யார் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios