ஸ்கர்ட்டை தூக்கினார்... கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார்...! பிரபல நடிகர் மீது 16 பெண்கள் பாலியல் புகார்...!
பிரபல ஹாலிவுட் நடிகர் மீது 16 பெண்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக ஹாலிவுட் திரையுலகை கலக்கி வரும் நடிகர் மார்கன் ஃப்ரீமேன். தற்போது 80வயதாகும் இவர் படப்பிடிப்புகளில் வேலை செய்யும் பெண்களிடம் தவறாக அணுகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தற்போது இவர் மீது 16 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.
மார்கன் ஃப்ரீமேன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 பெண்களும், அவர் பிற பெண்களிடம் தவறாக நடந்தபோது அதை பார்த்ததாக 8 பெண்களும் தெரிவித்துள்ளனர்.
'கோயிங் இன் ஸ்டைல்' படத்தில் நடித்த போது, அந்த படத்தில் புரோடக்ஷனில் உதவியாளராக பணியாற்றிய இளம் பெண் ஒருவர் மார்கன் ஃப்ரீமேன், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதே போல் மற்றொரு பெண் தன்னுடைய அனுமதி இல்லாமல் நடிகர் மார்கன் ஃப்ரீமேன், தன்னுடைய அறைக்கு வந்தது மட்டும் இன்றி தன்னுடைய பின்பக்கத்தை தொட்டு தடவியதாகவும். உள்ளாடை அணிந்திருக்கிறாயா...? என்று கேட்டு அடிக்கடி என் ஸ்கர்ட்டை தூக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அவரை பார்த்ததும் தான் பலமுறை விலகி சென்றதாக தெரிவித்துள்ளார் அந்த பெண்.
'நவ் யூ சீ மி' படத்தின் மூத்த புரோடக்ஷன் தொழிலாளி பெண் ஒருவர் இவரை பற்றி கூறியபோது, இந்த நடிகர் வருகிறார் என்றால், பெண்கள் யாரும் மார்பகம் தெரியும்படியோ, அல்லது டைட்டான உடையோ அணிந்து கூட வரமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மார்கன் ஃப்ரீமேன் மீது இப்படி, பல பெண்கள் குற்றம் சாட்டியதற்கு பதில் கொடுத்துள்ள இவர். நான் யாரையும் அசவுகரியமாக ஃபீல் பண்ண வைத்தது இல்லை. என்னுடைய நடவடிக்கையால் யாரவது அசவுகரியமாக ஃபீல் பண்ணி இருந்தால் அவர்களிடம் தான் மனதார மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.