Asianet News TamilAsianet News Tamil

நித்யா பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட 4 நிதி நிறுவனத்தின் பதிவு சான்றுகள் ரத்து செய்து ஆர்பிஐ உத்தரவு!

வங்கியின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாக கண்காணித்து வந்த நிலையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFC - Nonbank financial companies) பதிவு சான்றுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

RBI has cancels the registration certificates of 4 companies, including Nithya Finance Limited from Coimbatore rsk
Author
First Published Apr 6, 2024, 8:01 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாக வங்கியின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், கோயம்புத்தூரைச் சேர்ந்த நித்யா ஃபைனான்ஸ் நிறுவனம் உள்ளிட்ட வங்கி சாரா 4 நிதி நிறுவனங்களின் பதிவு சான்றுகளை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ வெளியிட்ட நிதி நிறுவனங்களின் பட்டியலில் கண்டில்ஸ் மோட்டார் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (உத்தரப்பிரதேசம்), நித்யா ஃபைனான்ஸ் லிமிடெட் (கோயம்புத்தூர்), பாதியா ​​ஹயர் பர்சேஸ் பிரைவேட் லிமிடெட் (பஞ்சாப்) மற்றும் ஜிவான்ஜோதி டெபாசிட்ஸ் அண்ட் அட்வான்சஸ் லிமிடெட் (ஹிமாச்சலபிரதேசம்) ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களின் பதிவு சான்றுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இனி, இந்த நிறுவனங்கள் யாவும் ஆர்பிஐயின் கீழ் எந்தவித வர்த்தக செயல்பாடுகளையும் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. zauba corp என்ற இணையதள தரவுகளின் படி, கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கோவையை சேர்ந்த நித்யா ஃபைனான்ஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ராஜலட்சுமி கோவிந்தசாமி நாயுடு, ரவீந்திரன் கெங்கசாமி, வெங்கடசுப்ப நாயுடு கெங்கசாமி மற்றும் துரைச்சாமி செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர். இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.2.5 கோடி. ஆனால், செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.74.69 லட்சம்.

இந்நிறுவனம் வங்கி அல்லாத பிற நிதி சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருந்து வந்துள்ளது. மேலும், பதிவு எண் 7600 மற்றும் CIN நம்பர் U65910TZ1987PLC007600 ஆகும். நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி 132 பழனி ரோடு, எஸ்.வி. மில்ஸ் போஸ்ட், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு 642128 ஆகும்.

இந்த நிதி நிறுவனங்களின் பதிவு சான்றுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, Saraswati Properties, Rowing Opportunity Finance (India), Quicker Marketing, Invel Commercial மற்றும் Mohan Finance ஆகிய 5 NBFC நிறுவனங்கள் தாமாக முன்வந்து தனது பதிவுச் சான்றுகளை ரத்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios