Asianet News TamilAsianet News Tamil

முதல் முறையாக ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி மாதாந்திர வசூல்.. மத்திய அரசு தகவல்..

முதல் முறையாக ஜிஎஸ்டி மாதாந்திர வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியது

GST Collections At All-Time High: Rs 2.10 Lakh Crore In April Rya
Author
First Published May 1, 2024, 1:04 PM IST

ஜிஎஸ்டி வரி வசூல் (சரக்கு மற்றும் சேவை வரி) ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.1 லட்சம் கோடியை தொட்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டு வரி விதிப்புக்குப் பிறகு இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் " மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2024 ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ. 2.10 லட்சம் கோடியை எட்டியது... பணத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, ஏப்ரல் 2024க்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.92 லட்சம் கோடியாக உள்ளது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 17.1 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. ” தெரிவிக்கபட்டுள்ளது.

ஏப்ரல் 2024 இல் வளர்ச்சி மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க 12.4 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது, இது உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வலுவான அதிகரிப்பு (13.4 சதவீதம்) மற்றும் இறக்குமதிகள் (8.3 சதவீதம்) ஆகியவற்றால் உந்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்திருக்கலாம் தெரியுமா? இதை நோட் பண்ணுங்க மக்களே..

இந்த ஜிஎஸ்டி சேகரிப்பு ஆண்டுக்கு ஆண்டு 12.4% வளர்ச்சியைப் பதிவுசெய்தது, உள்நாட்டு பரிவர்த்தனைகள் 13.4% வளர்ச்சி மற்றும் இறக்குமதிகள் 8.3% அதிகரித்தன. பணத்தைத் திரும்பப் பெற்ற பிறகு நிகர வருவாய் ரூ. 1.92 லட்சம் கோடியாக இருந்துள்ளது இது 17.1% ஆண்டு வளர்ச்சியாகும். இதற்கு முந்தைய அதிகபட்ச வசூல் ஏப்ரல் 2023 இல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது. 

 

2024 ஏப்ரலில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ரூ.37,671 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்துள்ளது. இதை தொடர்ந்து கர்நாடகா ரூ.15,978 கோடி, குஜராத் ரூ.13,301 கோடி, உத்தரபிரதேசம் ரூ.12,290 கோடி, தமிழ்நாடு ரூ.12,210 கோடி என ஜிஎஸ்டி வரியை வசூலித்துள்ளது. .

ஏப்ரல் 2024 வரி வசூல் விவரம் :

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST): ₹43,846 கோடி;
மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST): ₹53,538 கோடி;
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி): ₹99,623 கோடி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் வசூல் செய்யப்பட்ட ₹37,826 கோடி உட்பட;
செஸ்: இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலான ₹1,008 கோடி உட்பட ₹13,260 கோடி.

வங்கிகள் முதல் எரிவாயு சிலிண்டர்கள் வரை.. மே 1 முதல் பல்வேறு விதிகள் மாற்றம்.. என்னென்ன தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios