ஆர்சிபிக்காக மைதானத்திற்கு வந்த ஜாம்பவான் கெயில் – கிறிஸ் கெயிலுடன் போட்டோ எடுத்துக் கொண்ட ரிஷப் ஷெட்டி!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 68ஆவது லீக் போட்டியை பார்ப்பதற்கு கிறிஸ் கெயில் சின்னச்சுவாமி மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 68ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் போடப்படும் போது மழை இல்லாத நிலையில், போட்டி தொடங்கி 20 நிமிடங்களில் மழை குறுக்கீடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே போட்டியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
தற்போது வரையில் ஆர்சிபி 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்துள்ளது. இதில், விராட் கோலி 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 19 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இதே போன்று ஃபாப் டூப்ளெசிஸ் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டி ஆதரவு தெரிவிக்க ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பட்டீல் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் அணி டிராபியை வென்று ஆர்சிபிக்கு பெருமை சேர்த்தது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இந்த நிலையில் தான் ஆர்சிபியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் ஆர்சிபிக்கு ஆதரவு தெரிவிக்க சின்னச்சுவாமை மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 142 போட்டிகளில் விளையாடி 4965 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 31 அரைசதங்களும், 6 சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 175* ரன்கள் எடுத்துள்ளார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
கிறிஸ் கெயிலைப் போட்டி கன்னட நடிகரான ரிஷப் ஷெட்டியும் சின்னச்சுவாமி மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். ரிஷப்ஷெட்டி மற்றும் கிறிஸ் கெயில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று நடிகர் ஷிவராஜ் குமாரும் ஆர்சிபிக்கு ஆதரவாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு போட்டியை பார்க்க மைதானத்திற்உ வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, மிட்செல் சாண்ட்னர், சிமர்ஜித் சிங், மகீஷ் தீக்ஷனா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், மகிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரண் சர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் ஆர்சிபி 10 போட்டிகளிலும், சிஎஸ்கே 22 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
RCB Team and RCB women trophy
ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை. இரு அணிகளுக்கும் இடையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 33 இன்னிங்ஸில் விளையாடி 1020 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 90* ரன்கள் எடுத்துள்ளார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
எம்.எஸ்.தோனி விளையாடிய 32 போட்டிகளில் 751 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 84* ரன்கள் எடுத்துள்ளார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா 21 இன்னிங்ஸ் விளையாடி 19 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 13 போட்டிகளில் 1 சதம், 5 அரைசதம் உள்பட 661 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். அதிகபட்சமாக 113* ரன்கள் எடுத்துள்ளார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
மேலும், பர்பிள் கேப் வைத்திக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 583 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். இதில், ஒரு சதம், 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 108* ரன்கள் எடுத்துள்ளார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:
தினேஷ் கார்த்திக் ஒரு கேட்ச் அல்லது ஒரு ஸ்டெம்பிக் விக்கெட் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைப்பார்.
எம்.எஸ்.தோனி 4 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் அடித்த வீரராக சாதனை படைப்பார்.
விராட் கோலி (2993) இன்னும் 7 ரன்கள் எடுத்தால் சின்னச்சுவாமி மைதானத்தில் மட்டும் 3000 ரன்கள் எடுத்த வீரராக சாதனை படைப்பார்.
ருதுராஜ் கெய்க்வாட் (91) இன்னும் 9 சிக்ஸர்கள் அடித்தால் 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
எம்.எஸ்.தோனி (4644) 44 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக சாதனை படைப்பார்.
விராட் கோலி 76 ரன்கள் எடுத்தால் 8000 ரன்கள் எடுத்த வீரராக சாதனை படைப்பார்.
தினேஷ் கார்த்திக் 88 ரன்கள் எடுத்தால் ஆர்சிபிக்காக 1000 ரன்கள் எடுத்த வீரராக சாதனை படைப்பார்.