இங்கிலாந்தில் 12 வயது பள்ளிச் சிறுவனை ஏமாற்றி உடலுறவு வைத்துக் கொண்ட இளம் பெண் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரிட்டனின் ரெக்ஸ்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ரெய்னன் ஸ்காட். இவர் தனது ஃபேஸ் புக்கில், Role play Game  விளையாடியுள்ளார். அப்போது ஸ்டீவ் என்ற 12 வயது பள்ளிச் சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மெசஞ்சர் மூலம் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண், சிறுவனுக்கு ஃபேஸ்புக்கில் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும்  அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக சந்திப்பது என்று முடிவெடுத்து அங்கு சென்றனர். தொடர்ந்து வெட்ட வெளி என்று பாராமல் அங்கிருந்த ஆற்றின் கரையில்  இருவரும் உடலுறவு கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை அதிகாரிகள், அவர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் அனுப்பினர். உடனடியாக  அங்கு வந்த சிறுவனின் பெற்றோர் ரெய்னன் ஸ்காட் மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசாரிடம், ஸ்டீவ் பார்ப்பதற்கு 20 வயது பையன் போல தெரிந்ததால் அவனுடன் உடலுறவு கொண்டதாக  கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

பள்ளிச் சிறுவனை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்ட குற்றத்துக்காக  அந்த பெண்ணுக்கு நீதிபதி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். தற்போது ரெய்னன் ஸ்காட்  கம்பி எண்ணிக்  கொண்டிருக்கிறார்.