உல்லாசத்திற்காக முளைச்சலவை செய்யப்படும் இளம்பெண்கள்..!! தீவிரவாதிகள் பின்னணி என பகீர் தகவல்...!!
உல்லாசத்துக்காக பெண்களை கடத்தி அவர்களை அனுபவித்துவிட்டு பின்னர் அவர்களை சுட்டு கொலைசெய்துவிடுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.
தீவிரவாத இயக்கங்களில் இணைந்த 21 பெண்கள் சுட்டுக்கொள்ளப்பட்டு விட்டதாக தேசிய சிறுபான்மை ஆணையத்துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இளம் பெண்கள் கடத்தப்படுவதற்கு பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உல்லாசத்துக்காக பெண்களை கடத்தி அவர்களை அனுபவித்துவிட்டு பின்னர் அவர்களை சுட்டு கொலைசெய்துவிடுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. இதுவரை தீவிரவாத இயக்கங்களை நாடிச் சென்று இணைந்த 21 பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுவிட்டதாக தேசிய சிறுபான்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக , கேரளா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து பெண்கள் அடிக்கடி மாயமாவதாக புகார்கள் வந்தது பின்னர் அது தொடர்பாக விசாரணை நடத்தியதில் கேரளா மற்றும் டெல்லியை சேர்ந்த சில பெண்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு தீவிரவாத இயக்கங்களில் சென்று சேர்ந்ததும் அவர்களை யாரும் கடத்தவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலத்தில், அப்படி தீவிரவாதிகளை தேடிச்சென்ற பெண்களில் பெரும்பாலான பெண்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறாமலேயே தீவிரவாத இயக்கங்களில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. தங்கள் பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்த நிலையில் அவர்கள் தீவிரவாதிகளை நாடிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள சிறுபான்மை நல ஆணையம். பொண்களை யாரும் கடத்தவில்லை அவர்களாகவே வீட்டைவிட்டு வெளியேறி இருப்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது , சமீபத்தில் கேரளமாநிலம் கோழிக்கோடு, மற்றும் டெல்லியில் இருந்து மாயமான பெண்களும் வீட்டை விட்டு வெளியேறி தீவிரவாதிகளுடன் இணைந்த தற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக ஆணையம் தெரிவிக்கிறது. தீவிரவாத இயக்கங்கள் ஊடுறுவி மூளைச்சலவை செய்து அவர்களை இணைத்து வருவதாக குரியன் குற்றம் சாட்டியுள்ளார்.