Asianet News TamilAsianet News Tamil

உலக அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு..!! நெருக்கடியான நேரத்தில் இப்படியா..!!

ஆனாலும்  தற்போது தங்களிடம் உள்ள மீதமுள்ள  தொழிலாளர்களை வைத்து தேவையில் பாதியளவாகிலும் உற்பத்தி செய்ய போராடுவோம் என ஜம்ப்ஸ்டார்ட்  தொழிற்சாலை தெரிவித்துள்ளது .

world has condom scarcity - by condom protective factory's shutdown
Author
Delhi, First Published Mar 31, 2020, 1:54 PM IST

கொரோனா வைரஸ் எதிரொலியாக உலகம் முழுவதும்  வணிக வளாகங்கள் தொழில் நிறுவனங்கள்  மூடப்பட்டுள்ளதால் ,  ஆணுறை உற்பத்தி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் அதன் பற்றாக்குறை பெருமளவில் அதிகரித்துள்ளது.    உலகளவில் ஆணுறை உற்பத்தியில் முன்னணியில் இருந்து வரும்  மலேசியா உலக அளவில் உற்பத்தியாகும் ஆணுறைகளில் பாதி அளிவிற்கு உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.  இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மலேசியாவில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் ,  கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆணுறை உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது .  அதாவது மலேசியாவில்  உற்பத்தியாகும் கரேக்ஸ் பி.டி , டூரெக்ஸ் போன்ற பிராண்டுகள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது . 

world has condom scarcity - by condom protective factory's shutdown

இவைகள் பிரிட்டனிலுள்ள என்.எச்.எஸ் என்ற மாநில சுகாதார அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது .  அதுமட்டுமல்லாமல் ஐநா மக்கள் தொகை நிதி போன்ற திட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது .  இந்நிலையில் ஆணுறை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உற்பத்தி முற்றிலுமாக தடைபட்டுள்ளது .  இதனால் உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை உணர்ந்த  மலேசிய அரசு  தங்கள் நாட்டு நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது,   ஆனாலும் அதன் தொழிலாளர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா சிறப்பு விடுப்பில் இருப்பதால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .  ஆனாலும்  தற்போது தங்களிடம் உள்ள மீதமுள்ள  தொழிலாளர்களை வைத்து தேவையில் பாதியளவாகிலும் உற்பத்தி செய்ய போராடுவோம் என ஜம்ப்ஸ்டார்ட்  தொழிற்சாலை தெரிவித்துள்ளது . 

world has condom scarcity - by condom protective factory's shutdown  

இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ,  கோ மியா கியாட் ,  உலகளவில் ஆணுறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது அறிந்திருக்கிறோம் ,  இது மிகுந்த கவலையளிக்கிறது , இது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு வாரங்கள் மட்டுமின்றி அடுத்த ஒரு மாதம் வரையில் இந்தப் பற்றாக்குறை நீடிக்கும் .  ஆணுறையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மற்றும் முக்கிய நாடுகளான சீனா கொரோனா பாதிப்பால் முடங்கியுள்ளது.   அதேநேரத்தில் இந்தியா ,  தாய்லாந்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  அதே நேரத்தில் ஆணுறைகளுக்கு மாற்றங்கள் மருத்துவ கையுறைகள் போன்ற பல முக்கிய பொருட்கள் தயாரிப்பதில் மலேசியாவில் மற்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது . சர்வதேச அளவில்  பரவலாக முழுஅடைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில ஆணுறைகளில் தேவை அதிகரித்துள்ளது இதை சீர்செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும் என கோ மியா கியாட் தெரிவித்துள்ளார் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios