மரணத்துக்கு பின் 5 ஆண்டுகள் கணவரை ஏமாற்றிய மனைவி! காட்டிக்கொடுத்த மகள்...

Woman tells husband to water her plants after she passes away Years later he discovers theyre plastic
Woman tells husband to water her plants after she passes away. Years later he discovers they're plastic


தன் மனைவி மரணிக்கும்போது சொன்ன ஒரு வார்த்தைக்காக சுமார் 5 ஆண்டுகள் அவரின் வாக்கை காப்பாற்றிய கணவர் கடைசியில் ஏமாந்து போனதை அவரது மகளே காட்டிக் கொடுத்துள்ளார்.

 தென் ஆப்ரிக்காவின் ஜோகானஸ்பர்க்கில் நிகில் பிட்டான் தனது மனைவி பிட்ரி பிட்டானுடன் வாழ்ந்து வந்தார். பிட்ரி கடந்த 2013ல் தனது 69வது வயதில் உடல்நல பாதிப்பு குறைபாடு காரனமாக இறந்தார்.

இந்நிலையில் பிட்ரி இறக்கும் தருவாயில் தனது கணவர் நிகிலிடன் தான் இறந்த பின் வீட்டின் பாத்ரூமில் உள்ள செடிக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றும்படி கேட்டுக்கொண்டார். இதை சுமார் ஐந்து ஆண்டுகளாக நிகில் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனில் பணியாற்றி வந்த இவர்களின் மகள் அண்டோனியா நிகோல், நிகில் பணி ஓய்வு பெற்ற பின் வீட்டை காலி செய்வதில் நிகிலுக்கு உதவ ஜோகானஸ்பர்க் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது தான் நிகில் பிளாஸ்டிக் செடிக்கு சுமார் 5 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றிய விஷயம் தெரியவந்தது. இந்த கதையை கடந்த ஜனவரி மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து நிகோல் கூறுகையில்,’ நான் எனது தந்தைக்கு உதவ நேரடியாக சென்றேன். அங்கு அவர் தொடர்ந்து பிளாஸ்டிக் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை பார்த்தேன். இன்னும் என் தாய் என்னுடன் இருப்பதாக தற்போது உணர்கிறேன்.’ என்றார். இதுகுறித்து நிகில் கூறுகையில்,’ நான் பல நாட்கள் தண்ணீர் ஊற்றும் போது இன்னும் இது புதுசாகவே இருக்கே என ஆச்சரியப்பட்டுள்ளேன்.’ ஆனால் இவ்வளவு நாட்கள் பிளாஸ்டிக் செடிகள் என பார்க்காமல் எனது அம்மாவின் சொன்ன வார்த்தைக்காக இதுவரை பிளாஸ்டிக் என பார்க்காமல் தண்ணீர் ஊற்றியிருக்கிறார் என தனது அம்மா ஐந்து ஆண்டுகளாக தனது அப்பாவை எமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

Before my mum passed away, she gave my dad strict instructions to water the plants in the bathroom. He's been religiously watering them & keeping them alive. They look so amazing he decided to take them to his new home, only to discover they are plastic! Can hear my mum chuckling pic.twitter.com/N87giD5zKT

— Antonia Nicol (@Flaminhaystack) 16 January 2018
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios