மது போதையில் பால்கனியில் உடலுறவு... பெண்ணின் மீது ஆண் விழுந்ததால் பரிதாபம்..!
வீட்டு பால்கனியில் வைத்து உடலுறவு மேற்கொண்ட போது தம்பதி நிர்வாணமாக கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டு பால்கனியில் வைத்து உடலுறவு மேற்கொண்ட போது தம்பதி நிர்வாணமாக கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அப்பார்ட்மெண்டில் ஒரு ஆணும், பெண்ணும் ஜோடியாக திடீரென கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் உயிருக்கு போராடினர். அதை பார்த்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார். ஆனால், உயிருக்கு போராடிய ஆண் மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், கீழே விழுந்த பெண் மேலாடை மட்டும் அணிந்து கீழாடை இல்லாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, கீழே விழுந்த ஆண் ஆடையின்றி நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் இது கற்பழிப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துவங்கினர்.
இதையடுத்து, கீழே விழுந்து பலியான பெண்ணிற்கு 30 வயது, அந்த ஆணிற்கு வயது 29 இவர்கள் இருவரும் நண்பர்கள். இதனால், இவர்களுக்கு தனிமையில் சந்தித்து மது அருந்தி, உல்லாசமாக இருப்பது வழக்கம். அப்படித்தான் அன்றும் அவர்கள் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், இந்த முறை சற்று வித்தயாசமாக இருக்க வேண்டும் என வீட்டு பால்கனியில் உடலுறவு வைத்துள்ளனர்.
அப்பொழுது மது போதையில் இருந்த அவர்கள் செய்வதறியாது கீழே தவறி விழுந்துவிட்டனர். இதில் அந்த பெண்ணின் மீது அந்த ஆண் விழுந்ததால் அவர் உயிர் பிழைத்துவிட்டார். அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இது குறித்து தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.