கொலம்பியாவில் போதையில் 5 மணிநேரம் தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்ட 32 வயது பெண் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் காதலிப்பவர்கள் தங்களுக்குள் அந்யோனம் அதிகரிக்கவேண்டும் என்பதற்காகச் செக்ஸ் மராத்தானில் ஈடுபடுவது சகஜம் ஆகிவிட்டது. ஆனால் இந்த விபரீத விளையாட்டுக்கள் சில சமயங்களில் அவர்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது. 

இந்நிலையில் கொலம்பியா நாட்டில் கலி பகுதியைச் சேர்ந்த தி பீஸ்ட் என அழைக்கப்படும் பெண், தனது காதலுடன் குடிபோதையில், 5 மணி நேரம் தொடர்ச்சியாக செக்ஸில் ஈடுபட்டுள்ளார். அப்போது நீண்ட நேரம் செக்ஸ்சில் ஈடுபட்டதால் இந்த பெண் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரது காதலன் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து அந்த பெண்ணை உடனே மருத்துவமனைக்கு அவரே தூக்கிச்சென்றார். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார். இது தொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண் எடுத்துக்கொண்ட போதை பொருளினால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கொலம்பியாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.