வாட்ஸ் ஆப் தடை ஏற்பட இதுதான் காரணம் (வீடியோ)
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தற்போது தங்கள் சொல்ல விரும்பும் செய்திகளை, வாட்ஸ் ஆப் செயலி மூலம் பரிமாறிக்கொள்கின்றனர்.
தற்போது இந்த செயலி உலகில் உள்ள அனைவருக்கும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ஒரு கருவியாகவே மாறிவிட்டது. தற்போது வாட்ஸ் ஆப் செயலி ரீ ஸ்டோர் செய்யப்பட்டுவிட்டது. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் வாட்ஸ்-அப் சேவை சிறிது நேரம் முடங்கியது.
வாட்ஸ்-அப் செயலிழந்தது என டுவிட்டரில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. #whatsappdown என்ற ஹேஸ் டேக் பயன்படுத்தி உலகம் முழுவதும் பயனாளர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தனர். தற்போது மீண்டும் வாட்ஸ் அப் செயலி செயல்பட தொடங்கியது.
கடந்த மே மாதமும் இதே போல சில நிமிடம் உலகம் முழுவதும் வாட்ஸ் - அப் செயலி செயல்படாமல் முடங்கியது குறிப்பிடத்தக்கது .