காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய தாய்லாந்து! எப்படி தெரியுமா?
காதலர் தினத்தை, தாய்லாந்து நாடு வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளது. தாய்லாந்து அரசின் நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு தம்பதியர்கள் கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் காதலர் தினத்துக்கு ஆதரவும், எதிர்ப்பு எழுந்தது. சிலர் காதலர் தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்துத்துவா அமைப்புகள், காதலர்களை கட்டையால் அடித்து விரட்டியும், நாய்க்கும் - ஆட்டுக்கும் திருமணம் செய்து வைத்தனர். அது மட்டுமல்லாது, நாய்க்கும் - ஆட்டுக்கு நடைபெற்ற திருமணத்துக்கு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட கூத்தும் அரங்கேறியது.
காதலர் தினத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அளிக்கப்பட்ட தாய்லாந்தில், காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். தம்பதியர்களுக்கு விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தாய்லாந்தில், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதை அடுத்து, தம்பதியர்களுக்கு விட்டமின் மாத்திரைகளை அரசு அளித்தது. அவர்களுக்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தற்போது உலக வங்கியின் புள்ளி விவரப்படி, 1960 இல், தாய்லாந்தில் பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகள். 2015-க்குள் இது ஒரு பெண்மணிக்க 1.5 வீதமாக வீழ்ச்சியடைந்தது. கருவுறுதலை ஊக்குவிப்பதற்காக தாய்லாந்து அரசாங்கம் இதனை மேற்கொண்டுள்ளது. தாய்லாந்தின் இந்த நடவடிக்கை, காதலர்களுக்கும், தம்பதியருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.