அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் விர்ஜினியாவில் அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் நழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலை நடத்தியவர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், நகராட்சி ஊழியர் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இது அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அங்கு அவ்வப்போது துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.