Asianet News TamilAsianet News Tamil

கால் பந்து விளையாட்டின் போது மாரடைப்பால் இறந்த நடுவர்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

கால்பந்து விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருந்த மைதானத்தில், நடுவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

victor hugo death in foot ball stadium
Author
Chennai, First Published May 21, 2019, 3:28 PM IST

கால்பந்து விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருந்த மைதானத்தில், நடுவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெலிவியா நாட்டில் ஓரியண்டே பெட்ரோலிரோ கிளப் சார்பில் உள்ளூர் கால் பந்து விளையாட்டு,  எல் ஆல்டோவில் உள்ள மாநகர ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஸ்டேடியம்  கடல் மட்டத்திலிருந்து 3,900 மீட்டர் (12,795 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

victor hugo death in foot ball stadium

இரண்டு அணிகளுக்கு இடையே நடந்த இந்த கால்பந்து விளையாட்டு போட்டியில், 31 வயதாகும் விக்டர் ஹியூகோ,  நடுவராக இருந்தார். இந்நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,  திடீரென இவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதை அடுத்து கால்பந்து போட்டி நிறுத்தப்பட்டது . உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொடுத்துக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், விக்டர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

victor hugo death in foot ball stadium

மேலும் விக்டர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். ஏற்கனவே ஒருமுறை இவர் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  விக்டரின் மரணத்திற்கு பெலிவியா நாட்டின் அதிபர் எவோ மோரல்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறு வயதிலேயே விக்டர் இறந்துள்ளது அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

விக்டர் மைதானத்தில் மயங்கி விழுந்த காட்சி:

 

Follow Us:
Download App:
  • android
  • ios