சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய ராணுவத்துக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக சண்டை நடந்துவருகிறது.

சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியதால், இந்த போர் உள்நாட்டு போர் என்பதைக் கடந்து ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அதிகாரப் போராக மாறிவிட்டது.

இந்த போரில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கவுடா நகரில் சிரியா-ரஷ்யா கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், சிரியாவில் நடக்கும் போர் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ உங்களுக்காக..

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/CfGxmFIsjmw" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>