அமெரிக்க தேர்தல்... அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது.. எப்படி தெரியுமா?
அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே போன்ற நிலை 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே போன்ற நிலை 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க தேர்தல் நடைமுறையை பொறுத்த வரையில் அதிபரை மக்கள் நேரடியாக நேர்த்தெடுக்க மாட்டார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்கள் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். தற்போது மொத்தம் 538 பிரதிநிதிகள் குழு உறுப்பினர் இருக்கிறார்கள். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி அடைய முடியும்.
எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். உதாரணமாக, ஒரு மாகாணத்தில் வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும், அந்த மாகாணத்துக்கான மொத்த பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களின் வாக்குகள் அனைத்தும் வெற்றியாளருக்கே போய் சேரும்.
எனவே பெரிய மாகாணங்களில் யார் வெல்கிறார்களோ அவரே அதிபராக முடியும். மேலும், மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அதிபராக முடியும். இதன்படிதான், கடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் இதே போன்ற ராசி டிரம்ப்புக்கு உதவினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.