“எங்களோடு படுத்தால் தான் சாப்பாடு...” ஐநா அனுப்பிய உதவிக்குழு சிரியா பெண்களுக்கு செக்ஸ் தொல்லை! 

UNA rescue team gave sexual harassment for syria women
UNA rescue team gave sexual harassment for syria women


உடலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாது என சிரியா போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய ஐநா அனுப்பிய குழு அனுப்பியவர்கள் இந்த செயலை செய்துள்ளார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருவதால் சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை போராக மாறியது. இந்த போரில் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 11 நாட்களில் மட்டும் 900 பேர் வரை பலி ஆகியுள்ளார்கள். 

UNA rescue team gave sexual harassment for syria women

இங்கு தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த சமயத்தில் ஐநா அனுப்பி இருக்கும் உதவிக் குழு அங்கே சென்று உதவிகள் செய்து வருகின்றனர். அங்கு மருத்துவ குழு, உணவு குழு என நிறைய உதவி குழுக்கள் ஐநா மூலம் அங்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில், சிரியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் போது இந்த கொடுமை நடக்கிறது. அவர்களிடம் உடலுறவு கொண்டால் மட்டுமே, மருத்துவ உதவி உணவு கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஐநா மூலம் சென்ற பல அதிகாரிகள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UNA rescue team gave sexual harassment for syria women
அதேபோல, உதவிகள் கொடுக்கப்படும் இடத்திற்கு பெண்கள் செல்வது இல்லை. அங்கு சென்று உதவிகளை பெற்று திரும்பினால், உடலுறவு வைத்துக் கொண்டதாக நினைப்பார்கள் என்று செல்வதை தவிர்க்கிறார்கள். இதன் காரணமாகவே பலர் இன்னும் மருத்துவ உதவியும், உணவும் பெறாமல் இருக்கிறார்கள்.  அதுமட்டும் இல்லாமல் அங்கு வந்து இருக்கும் உதவிப்படை அதிகாரிகள், சில பெண்களை திருமணமும் செய்கிறார்கள். ஆனால் இது தற்காலிக திருமணம் மட்டுமே. அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்கவேண்டும் என்றால் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்களாம். 

மேலும் அங்கு வரும் இந்த உதவி செய்யும் பணியாளர்கள் பெண்களை பைக், காரில் வைத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். பல நாட்களை தங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வீட்டில் அந்த பெண்களை வேலை செய்ய வைக்கிறார்கள். அதேபோல பாலியல்க்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  ஐநா அனுப்பி இருக்கும் உதவிக்குழுவில் இருக்கும் ஆண்கள் இந்த செயலை செய்வது. ஆனால், ஐநா அமைப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஐநாவுடன் ஒப்பந்தம் செய்து இருக்கும் இந்த குழுக்களை சேர்ந்த ஆண்கள் விளக்கம் அளித்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

UNA rescue team gave sexual harassment for syria women

இந்த பிரச்சனை கடந்த 2015ல் இருந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடலுறவு செய்தால்தான் உணவு என்று அப்போதே உதவிக்குழு பணியாளர்கள் பெண்களை வற்புறுத்தி வருவ்பதால் பல பெண்கள் பட்டினியில் தவிக்கிறார்களாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios