ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வமான காரில் அதிகாரி ஒருவர் பெண்ணுடன் பாலியல் தொடர்பில் இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் முக்கியமான சாலையில் ஐ.நா அதிகாரி ஒருவர் பெண் ஒருவருடன் பின் இருக்கையில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். ஐ.நா அமைப்பின் அதிகாரப்பூர்வ காரில் இதுப்போன்ற செயலில் அதிகாரி ஒருவர் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐ.நா உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவில் பரபரப்பான சாலையில் ஐ.நா அதிகராரி ஒருவர் சிவப்பு உடை அணிந்த பெண் ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். இந்த காட்சிகள் அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். சுமார் 18வினாடிகள் ஓடும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவந்தது.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஐ.நா தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த காரில் இருப்பவர்கள் ஒருமித்த உறவில் இருந்தார்களா அல்லது அந்த பெண் பாலியல் தொழிலாளியா? என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஐ.நா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அறிக்கையில்  “இந்த வீடியோ ஐ.நா-வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் வெறுக்கத்தக்கது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும். ஐ.நா ஊழியர்கள் பாலியல் குற்றத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்“ என்றும் தெரிவித்துள்ளார்.