கற்பழிப்பு வழக்கில் 4 பேர் தூக்கு...!! தயவு செய்து மரண தண்டனைக்களை கைவிடுங்கள் என மன்றாடிய ஐநா மன்றம்..!!
உலக நாடுகள் மரண தண்டனையை முன்வந்து நிறுத்த வேண்டும் என்பது தான் ஐநா மன்றத்தின் நிலைபாடு , அல்லது குறைந்த பட்ச அளவில் அதை தடை செய்வாவது வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்
அனைத்து நாடுகளும் மரண தண்டனைகளை தடை செய்ய வேண்டும் அல்லது நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஐநா மன்றம் வலியுறுத்தியுள்ளது . இந்தியாவில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஐநா மன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது . கடந்த 7 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் சிங் (32) பவன் குப்தா (25) வினை சர்மா( 26) மற்றும் அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கே டெல்லி திகார் சிறையில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மரண தண்டனை குறித்து ஐநா மன்றம் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது , ஐநா மன்றத்தின் பொதுச் செயலாளர் ஆண்டனி குட்ரெஸ்சின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் , கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், அனைத்துலக நாடுகளும் மரண தண்டனையை கைவிடுவதுடன், அதை தடை செய்ய வேண்டும் என ஐநா மன்றம் அழைப்பு விடுக்கிறது. உலக நாடுகள் மரண தண்டனையை முன்வந்து நிறுத்த வேண்டும் என்பது தான் ஐநா மன்றத்தின் நிலைபாடு , அல்லது குறைந்த பட்ச அளவில் அதை தடை செய்வாவது வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் . கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் பேருந்தில் நள்ளிரவில் பயணம் செய்த பிசியோதெரப்பி மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தது.
இது ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்தது , இந்நிலையில் அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தூக்கு டெல்லி திகார் சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது , ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாக கருதப்படும் திஹாரில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தண்டனைக் கைதிகள் இருந்து வரும் நிலையில் நான்கு பேருக்கு ஒரே நேரத்தில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் , கடந்த ஜனவரி மாதமே 4 பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் அதில் தங்களுக்கு உள்ள பல்வேறு சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவர்கள் நால்வரும் காலம் கடத்தி வந்த நிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . இந்திய பாலியல் தண்டனை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என நாடு முழுவதுப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மரண தண்டணைகளை நிறுத்த வேண்டும் என ஐநா மன்றம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது .