பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, வைர வியாபாரி நிரவ் மோடிக்கு 3 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 4-வது முறையாகவும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,600 கோடி மோசடி செய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தன. இந்த நிலையில், அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 

இந்நிலையில், 84 நாட்கள் சிறையில் கழித்துள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனுக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தால் 3 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் 4-வது முறை ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 4-வது முறையாக லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.