ட்ரம்ப்புக்கு "சூனியம்" வைக்க நிர்வாண சிலை..! ரூ.18 லட்சம் கொடுத்த அமானுஷியர்..!
அமானுஷிய ஆராய்ச்சியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நிர்வாண சிலையை 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
2016 தேர்தலின் போது தயாரிக்கப்பட 5 நிர்வாண சிலைகள்
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெர்க்க அதிபர் தேர்தலின் போது, உலக கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் டிரம்ப்பின் ஐந்து நிர்வான சிலைகளை தயாரித்து அதை காட்சிப்படுத்தியது.
அதில் நான்கு சிலைகளை அவரது ஆதரவாளர்கள் உடைத்து எரித்தனர்.பின்னர் ஒரே ஒரு நிர்வாண சிலை மட்டும் இது நாள் அப்படியே பாதுகாப்பாக வைக்கப்பட்டு வந்தது
இந்நிலையில், இன்று மீதம் உள்ள அந்த ஒரே ஒரு நிர்வாண சிலையை அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
ஏலம் எடுத்த இந்த நிர்வாண சிலையை லாஸ் வேகஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்போவதாக அவர் தெரிவித்து உள்ளார்
இருந்த போதிலும்,டிரம்ப்பின் நிர்வாண உருவசிலையை வைத்து அமானுஷ்யம் செய்யப்போவதாகவும், ட்ரம்ப்பிடம் இருந்து அமெரிக்காவை மீட்க இந்த வேலை நடைபெற்று வருவதாகவும் பலரும் பல விதங்களில் கருத்து தெரிவித்து உள்ளனர்.