இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு டொனால்டு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். பிணைக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் ஹமாஸ் மோசமான விலையைக் கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் விவகாரத்தில் தலையிட்டுள்ளார். காசாவில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை திரும்ப ஒப்படைக்க ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிணைக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் ஹமாஸ் மோசமான விலை கொடுக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். டொனால்டு டிரம்ப் இது குறித்து தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாகவும், நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஹமாஸ் அமைப்பில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.

பிணைக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் அவர்கள் மோசமான விலையைக் கொடுக்க நேரிடும் என்றும், அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் காசாவை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ள டிரம்ப், ஹமாஸ் பிணைக் கைதிகளை வைத்திருந்தால் காசாவின் எதிர்காலமே ஆபத்தானதாக இருக்கும் என்றும் பொதுமக்களுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, சீனா மீது அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு ஏப்ரல் 2 முதல் அமல்!

Scroll to load tweet…

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை சந்தித்த டிரம்ப்:

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள் குழுவை அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு காசா மக்களுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். "காசா மக்களுக்காக ஒரு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது, ஆனால் பிணைக் கைதிகளை வைத்திருக்கும் வரை அது நடக்காது. அப்படிச் செய்தால் நீங்கள் அழிந்துவிடுவீர்கள்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

'எல்லாம் சரி செய்ய நேரம் வந்துருச்சு...' ஆப்பு அடித்த US அரசால் கலங்கி நிற்கும் ஜெலென்ஸ்கி