4 மாத குழந்தையை இரண்டாக பிளந்த தந்தை! மேஜிக் செய்ததால் நிகழ்ந்த சோகம்... வைரலாகும் வீடியோ!

TOT ALLY BONKERS Magician dad saws his sleeping baby daughter in HALF in creepy video sparking outrage among parents
First Published Feb 19, 2018, 11:48 AM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



அமெரிக்காவில் மேஜிக் செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ப்லாம் என்பவர் மேஜிக் செய்யும் கலைஞர் இவருக்கு ஒரு 4 மாத பெண் குழந்தை உள்ளது. அவர் ஒரு ஆபத்தான மேஜிக் செய்வதற்காக அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார்.  


4 மாத பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து அதை வைத்து மேஜிக் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி இரண்டு புத்தகங்களை எடுத்து அந்த குழந்தையின் வயிற்று பகுதியில் பிளவு செய்தது போல் செய்தார். என்ன ஆச்சரியம் என்றால் அந்த குழந்தை இரண்டாக பிளந்தது. மேலும் அந்த குழந்தை இரண்டாக துண்டிக்கப்பட்ட பிறகும் சிரித்து கொண்டிருந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மேஜிக் காட்சியை வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதுவரை இந்த வீடியோவை பார்த்து சுமார் 16 கோடி பேர் பாத்துள்ளனர் இந்த மேஜிக்கை எப்படி செய்திருப்பார் என அனைவரும் திகைத்தனர். இந்த மேஜிக் குறித்து பார்வையாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த மேஜிக்கில் குழந்தை வைக்கப்பட்ட டேபிளின் கீழ் பகுதி கண்ணாடி என்றும் அது குழந்தையின் முழு உடலை மறைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

ஒரு சிலரோ குழந்தையின் உடலை தனியாகவும் மார்பு , தலை, தோள் பட்டை பகுதியை தனியாகவும் காட்டும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளார். என கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். குழந்தையின் கால்களை பிங்க் நிற கம்பளி கொண்டு ஜஸ்டின் மறைத்திருக்கலாம் என்றும் குழந்தை இரண்டாக பிளவுப்பட்ட போட்டோவை புத்திசாலித்தனமாக ஜஸ்டின் எடிட் செய்து போட்டுள்ளார் என பதிவிடுகின்றனர்.

Video Top Stories