பாதி மூளையுடன் வாழும் விந்தை மனிதர்!
அயர்லாந்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு சில நாட்களாக மயக்கம் வந்து கொண்டே இருந்துள்ளது. 84 வயதான அவருக்கு இது சாதாரணமானதுதான் என்று நினைத்த அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, அவரது இடது கால் மற்றும் கை செயலிழந்தது போல் உணர்ந்துள்ளார். இதனை அடுத்து, மருத்துவமனையை நாடியுள்ளார்.
முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தலையையை ஸ்கேன் செய்து பார்க்க முடிவு செய்தனர். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்துபோயுள்ளனர். அதற்கு காரணம் முதியவரின் மண்டையோட்டின் வலது புறத்தில் சுமார் மூன்றரை இன்ச் அளவுக்கு வெற்றிடமாக இருந்துள்ளது. தலையில் பலமாக அடிபட்டால் இம்மாதிரியான வெற்றிடம் உருவாகி காற்று
அடைத்துக் கொள்ளும். ஆனால் அந்த முதியவருக்கு அப்படி எந்த காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து அவரின் பழைய மருத்துவ குறிப்புகளை ஆராய்ந்துள்ளனர் மருத்துவர்கள். ஆனால் சிகிச்சை செய்ததாகத் தகவல் எதுவும் அதில் இல்லை. 1.4 கிலோ எடை கொண்ட மூளையில் பாதி காணாத நிலையில், அந்த முதியவர் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வருகிறார். இது குறித்து முதியவரிடம் கூறியபோதே அவருக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்துள்ளது. இந்த நிலையில் அவரை மருத்துவமனையில் தங்கவைத்து, தலை சுற்றலுக்கு சிகிச்சைகள் அளித்தனர். இதில் அவர் முழுவதும் குணமடைந்து விட்டார்.
முதியவருக்கு மூளையில் உள்ள குறைபாடு குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பின்லே பிரவுன், அவரது குறைபாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்த பாதிப்புகள் போன்ற குறிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அதற்கான காரணத்தை கண்டுபிடித்து விடுவதாக அவர் உறுதியளித்துள்ளார். டாக்டர் பின்லே பிரவுன்-ன் பணி வெற்றியடையட்டும்.