சமூக வலைதளத்தின் மூலம் பழக்கம்... இளம்பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற இளைஞர்...!
சமூக வலைத்தளம் மூலம் நட்பு ரீதியில் பழக்கமான இளம்பெண்ணை கருத்து மோதலால் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்த அமெரிக்க இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஜப்பானின் அஹாசா நகரில் கடந்த ஒருவாரமாக இளம்பெண் ஒருவரின் பல்வேறு பாகங்கள் வெவ்வேறு இடங்களில் கிடைத்த வண்ணம் இருந்தது.
நேற்று முன்தினம் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் பெரிய சூட் கேஸ் தனியாக இருந்தது. போலீசார் அதை கைப்பற்றி பார்த்தபோது கொடூரமாக சிதைந்த நிலையில் இளம்பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சொகுசு விடுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.
அந்த சிசிடிவி கேமராவில் அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவர் அடிக்கடி பெரிய பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேசெல்வது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கண்டுபிடித்து விசாரித்தபோது, அமெரிக்காவை சேர்ந்த 26 வயதான பே ராக்டர் என்பதும், அவருக்கு சமூக வலைத்தளம் மூலம் ஜப்பானை சேர்ந்த ஜாய்க்கோ-வுடன் நட்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.
அமெரிக்காவில் இருந்து ஜாய்க்கோவை சந்திப்பதற்காக பே ராக்டர் கடந்த 16-ம் தேதி ஜப்பான் வந்துள்ளார்.
சொகுசு விடுதியில் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது திடீர் கருத்துமோதல் ஏற்பட்டதால் ஜாய்க்கோவை பே ராக்டர் வெட்டி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.