இது ஒரு மாயை...! மாற்ற முடியாது...! ஃபேஸ்புக் நிறுவனத்தின் வேலையை உதறித்தள்ளிய இளைஞர்...!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வேலையை உதறிதள்ளிய இளைஞர் ஒருவர், ஃபேஸ்புக் ஒரு மாயை எனவும் அதை என்னால் மாற்றமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய தாவிஸ் என்பவரை வேலைக்கு நியமித்தது ஃபேஸ்புக் நிறுவனம்.
இந்த வேலைக்காக கூகுள் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வந்த தாவிஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார்.
மார்க் சக்கர்பெர்க் தாவிஸை நியமனம் செய்து உத்தரவிட்டார். ஆனால் மார்க் சக்கர்பெர்க் குறித்த பொதுமக்கள் கருத்தை ஆய்வு செய்வதுதான் தாவீஸுக்கு கொடுக்கப்பட்ட முழு நேர வேலை.
அப்போது ஃபேஸ்புக் குறித்து மக்கள் மத்தியில் பெரிதாக நல்ல எண்ணம் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், தாவிஸ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திடீரென ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து The Verge ஊடகத்துக்கு தாவிஸ் அளித்த பேட்டியில், சர்வதேச அளவில் மக்கள் மார்க் சக்கர்பெர்க் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சர்வே எடுப்பதுதான் ஃபேஸ்புக் நிறுவனத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை எனவும் சர்வேயில் நான் ஒருசில விஷயங்களைப் புரிந்துகொண்டேன் எனவும் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் மீது அப்படியொன்றும் நல்ல அபிப்ராயம் இல்லை எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் வணிகம் செய்யும் முறையே எனக்குப் பிடிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் ஒரு மாயை என்பதை உணர்ந்துவிட்டேன். என்னால் இதை மாற்ற முடியாது. ஃபேஸ்புக் நிறுவனம் பின்பற்றும் கலாசாரத்தையும் என்னால் மாற்ற முடியாது. அதனால் ஃபேஸ்புக் வேலையை உதறித்தள்ளினேன் எனவும் குறிப்பிட்டார்.