எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்! எதுக்குத் தெரியுமா? 

The woman entered the x-ray machine
The woman entered the x-ray machine


ரயில் நிலையத்தில் உள்ள சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், பெண் ஒருவர் பையுடன் நுழைந்த சம்பவம், அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சீனா, டோங்குவான் நகரின் ரயில் நிலையத்தில் பொருட்கள் சோதனை செய்யும் சாவடியில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யப்பட்டே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ரயில் நிலையத்துக்கு வந்த பயணி ஒருவர், சோதனை இயந்திரத்துக்குள் சென்றுள்ளார். 

The woman entered the x-ray machine

ரயில் நிலையத்துக்கு வந்த அந்த பெண், தன்னுடைய பையை சோதனை இயந்திரத்துக்குள் விட அதிகாரிகள் கூறினர். ஆனால், தான் கொண்டு வந்த பையை, சோதனை இயந்திரததுக்குள் விட்டு போக கூடாது என்பதற்காக, அந்த பெண்ணும் சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் சென்று விட்டார். 

The woman entered the x-ray machineஅந்த பெண், சோதனை இயந்திரத்துக்குள் சென்றதைப் பார்த்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், அந்த பெண் இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த பெண்ணின் செய்கை குறித்து பலரும், கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர். பணத்தைவிடவும் உயிர் பெரியது எனவும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios