சீனாவில் இருந்து ஜிம்பாப்வே நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆணுறைகள் அளவில் சிறியதாக உள்ளதாகவும் இதனால் பால்வினை நோய்கள் மேலும் பரவும் ஆபத்து உள்ளதென்றும் அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று ஆப்ரிக்கா. பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில், சீன நாட்டில் இருந்து ஜிம்பாப்வேக்கு காண்டம்-கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் தயாரிக்கப்படும் காண்டம், அளவில் சிறியதாக உள்ளது என்று ஜிம்பாப்வே சுகாதார துறை அமைச்சர் டேவிட் பரேரியண்டவா குற்றம்சாட்டியுள்ளார். இதனால் எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் மேலும் பரவும் ஆபத்து உள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காண்டம்கள், அளவில் சிறியதாக உள்ளதால் முறையாக பயன்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு மக்கள் கூறி வந்தனர். இதனால் பால்வினை நோய்கள் மேலும் பெருகும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

பொதுமக்களின் கருத்தைக் கேட்ட இந்த நிலையில்தான் ஜிம்பாப்வேயின் சுகாதார துறை அமைச்சர் டேவிட் பரேரியண்டவா இந்த பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.