ஸ்ரீதேவி மரணத்தில் மறைக்கப்பட்ட சிரியா போர்...! பெரிது படுத்தாத மீடியாக்களும்... கண்ணீர் சிந்தும் புகைப்படங்களும்...
சிரியாவின் தலைநகர் டாமஸ்கஸுக்கு அருகே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிக முக்கிய பிராந்தியம்தான் கிழக்கு கூட்டா பிராந்தியம்.
இந்நிலையில், சிரியாவில் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா ராணுவத்தின் ஆதரவுடன் அரசு படை நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே கடந்த ஞாயிற்று கிழமை அரசு படையினர் குளோரின் விஷவாயு குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டபடி 30 நாள் போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் சிரிய அரசின் கூட்டாளியான ரஷ்யா, எவ்வாறு இதனை அமலுக்கு கொண்டு வருவது என் ஒப்புக் கொண்ட பின்னரே இந்த அறிவிப்பை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.
இத்தகைய கொடூர தாக்குதலின் நிகழ்வுகளை இந்திய ஊடங்கங்கள் பெரிதாக கவர் செய்யவில்லை. காரணம் பிரபல பாலிவுட் நடிகையின் மரணம்.
கடந்த சனிக்கிழமை நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் சில நாட்களில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் பாத்டப்பில் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனால் அவரின் உடல் மும்பைக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. ஸ்ரீதேவி மரணம் குறித்த கேள்விகள் அவரது கணவர் பக்கம் சந்தேகத்தை வலுப்படுத்தி வருகின்றது.
கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த இந்த ஸ்ரீதேவியின் மோகம் இன்னும் மீடியாக்களுக்கு ஓய்ந்த பாடில்லை. ஸ்ரீதேவியின் செய்திகளை எடுத்து கூறும் ஆர்வத்தில் கடந்த ஒருவாரமாக சிரியாவில் நடக்கும் போரைப்பற்றியும், செத்து மடியும் பொதுமக்கள் குறித்து மீடியாக்கள் கவர் செய்ய மறந்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும்.