ப்ளீஸ் வாங்க…உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்…. சிரியா கட்டட இடிபாடுகளில் இருந்து கதறிய சிறுமி….
சிரியா வான் வழித்தாக்குதலில் இடிந்து தரைமட்டமான கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமி ஒருவர், தன்னை மீட்க வந்தவர்களிடம், ப்ளீஸ் சீக்கிரம் வாங்க… உங்களுக்காத்தான் காத்திட்டிருக்கேன் …என்னை காப்பாத்துங்க என கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது..
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதிபரின் ஆதரவு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த 7 வருடங்களாக அதிபர் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் வான்வழித்தாக்குதலில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை தி ஒயிட் ஹெல்மெட் என்ற தன்னார்வ அமைப்பினர் கடந்த 5 ஆண்டுகளாக மீட்டு காப்பாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய குடியுருப்பு கட்டடம் மீது வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அந்த கட்டடம் இடித்து சுக்கு நூறாகியது. மீட்புப் பணிகளை அந்த அமைப்பினர் செய்து கொண்டிருந்தபோது இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு சிறுமியின் முனகல் சத்தம் கேட்டுள்ளது.
உடனயாக அந்த சிறுமியை தி ஒயிட் ஹெல்மெட் அமைப்பினர் மீட்டனர். அப்போது அந்த சிறுமி, ப்ளீஸ் சீக்கிரம் வாங்க… உங்களுக்காத்தான் காத்திட்டிருக்கேன் …என்னை காப்பாத்துங்க என்று கதறி அழுதுள்ளார்.
உடனடியாக அந்த சிறுமியை மீட்ட தன்னார்வலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படத்தை தி ஒயிட் ஹெல்மெட் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.