சம காலத்தின் தலைசிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!!
உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.
விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பகுதியில் பிறந்தார் . இவர் தனது 21வது வயதில் மோடோர் நியூரான் எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து 1965 ம் ஆண்டு இவருக்கு ஜேன் வில்டி என்பவருடன் திருமணம் நடந்தது.
ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அண்டவியலும், குவாண்ட்டம் ஈர்ப்பும் ஆகியவை இவர் ஆய்வு செய்ததில் முக்கியமானதாகும்.
Black holes ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாது என நம்பப்பட்டதற்கு மாற்றாக கருந்துளையினும் துணிக்கைகள் வெளியேறுகின்றன. அதன் மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய் விடுகின்றன என ஹாக்கிங் தனது ஆராய்ச்சி முடிவில் ஆதாரத்துடன் காட்டினார். தனது பெயருக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அவருக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு அறிவியல் உலகிற்கு மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.