இலங்கை நாடாளுமன்றத்தில் உச்சக்கட்ட பதற்றம்... மிளகாய் பொடி தாக்குதல்... நாற்காலி வீச்சு... பரபரப்பு வீடியோ!!!
இலங்கை நாடாளுமன்றத்தில் 2-வது உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபக்சே ஆதரவு எம்பி.க்கள் சபாநாயகர், போலீசார் மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 2-வது உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபக்சே ஆதரவு எம்பி.க்கள் சபாநாயகர், போலீசார் மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சபாநாயகரின் இருக்கையை அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மகிந்தா ராஜபக்சேவை அறிவித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சேவும், அவருடைய ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் நாடாளுமன்ற கூட்டத்தில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அடிதடி சண்டையில் சபாநாயகர் தாக்கப்பட்டார். இந்நிலையில் அவை மீண்டும் சுடியது. அப்போது பலத்த பாதுகாப்புடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா உள்ளே நுழைந்தார். ஆனால், அவரது இருக்கையை ராஜபக்சே தரப்பு எம்பி.க்கள் ஆக்ரமித்துக் கொண்டனர். மேலும் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை மறுதினம் வரை அவையை ஒத்திவைப்பதாக அறிவித்து அங்கிருந்து வெளியேற முயன்றார். அவரையும் சில எம்பிக்கள் சூழ்ந்து கொண்டனர். போலீசார் உள்ளே நுழைந்து சபாநாயகரை பத்திரமாக மீட்டுச் சென்றனர் முன்னதாக, அவைக்குள் போலீசார் நுழைந்ததும் அவர்கள் மீதும், ரணில் ஆதரவு எம்பி.க்கள் மீதும் ராஜபக்சே ஆதரவு எம்பி.க்கள் மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில எம்பி.க்கள் இருக்கைகளை தூக்கி அடித்தனர். இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.