ஸ்பெயினில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது,   கடந்த 24 மணிநேரத்தில் 950 பேர் அங்கு உயிரிழந்த நிலையில்   பலி எண்ணிக்கை 9,053 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் அதிகம் பேரை இழந்த நாடு என்ற பட்டியிலில்  ஸ்பெயின் முதலிடம்  பெற்றுள்ளது ,  இதுவரை அங்கு  கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 238 பேர் வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர் . அதாவது  ஒரே நாளில் அதிகம்  பேரை பறிகொடுத்த நாடுகள் பட்டியிலில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் முதலிடம் வகித்து வந்த நிலையில் தற்போது ஸ்பெயின் அந்த இடத்தை பிடித்துள்ளது.  

அமெரிக்காவில் 884 பேரும்  இங்கிலாந்தில்  563 பேரும் உயிரிழந்ததே  ஒரே நாளில் நடந்த அதிகபட்ட  உயிரிழப்பாக இருந்து வந்தது  இதை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  இங்கிலாந்துக்கு துயரமான நாள் என அதை குறிப்பிட்டிருந்தார், இந்நிலையில்  உலக அளவில் 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 400 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர் . இதுவரை  47 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர் .  இதுவரை உலகிலேயே கொரோனாவுக்கு அதிக அளவில்  பாதிக்கப்பட்ட நாடாக  இத்தாலி இருந்து வருகிறது.  இங்கு  ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலி எண்ணிக்கை 13 ஆயிரத்து 755 ஐ கடந்துள்ளது.  

இத்தாலியில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் ஸ்பெயினில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.   கடந்த புதன்கிழமை ஒரே நாளில்  849 பேர் உயிரிழந்தனர்.  அதேபோல் ஸ்பெயினில் நாளொன்றுக்கு 12 சதவீதம் பேர்  நோய் தொற்றுக்கு ஆளாவதாக  அந்நாட்டு  சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  கடந்த இரண்டு வாரங்களாக இங்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தும் எந்த பலனும்  இல்லை எனவும், அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை  வழங்க போதிய மருத்துவ உபகரணங்களும் மருந்து பொருட்களும் இல்லாததே ஸ்பெயினில் அதிக  உயிரிழப்புக்கு காரணம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.