சிங்கப்பூர்.. சக ஊழியர்கள் தன்னை கற்பழித்ததாக பெண் கொடுத்த பரபரப்பு புகார் - போலீஸ் விசாரணையில் வெளியான Twist!
சிங்கப்பூரில் தனது சக ஊழியர்களுடன் மது பார்ட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண், தனது மூன்று சக ஊழியர்கள் தன்னை இரவு நேரத்தில் கற்பழித்ததாகவும், பின்னர் அவர்களுக்கு பயந்து தனது உறவினர் ஒருவரை டாக்ஸி புக் செய்யச் சொல்லி அங்கிருந்து தப்பியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
என்ன நடந்தது?
சிங்கப்பூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒரு பெண் தனது சக ஆண் ஊழியர்கள் மூவருடன் இணைந்து சிங்கப்பூரில் உள்ள லாவண்டர் என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இரவு சுமார் 11 மணி அளவில் அந்த நான்கு பேரும் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். இந்த சூழலில் தான் மது போதை அதிகமான தன்னை, ஒருவர் பின் ஒருவராக, தன்னுடன் இருந்த மூன்று சக ஊழியர்கள் கற்பழித்ததாக அந்த பெண் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின்படி செப்டம்பர் 5ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடக்க, அடுத்த நாள் அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அந்த மூவரும் தன்னை கற்பழித்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பிக்க, உடனடியாக தனது உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் அழைத்து, தான் இருக்கும் இடத்திற்கு உடனடியாக ஒரு டாக்ஸியை அனுப்புமாறும், தன்னை தனது சக ஊழியர்கள் கற்பழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
பதறிப்போன அந்த உறவினர், உடனடியாக அவர் இருக்கும் இடத்திற்கு ஒரு டாக்ஸியை அனுப்ப, அவரும் அதிலே ஏறி வீட்டுக்கு சென்று, அடுத்த நாள் காலை அவரும் அந்த உறவினரும் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
உடனே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அடுத்த நாள் அந்த ஹோட்டலுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, அந்த பெண்ணுடன் பணிபுரிந்த இரண்டு சக ஊழியர்களை பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால் அப்பொழுதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன.
உண்மையில் நடந்தது என்ன?
மீண்டும் செப்டம்பர் 8ம் தேதி அந்த பெண்ணை போலீசார் விசாரிக்க துவங்கிய நிலையில் உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளது. அவர் தன்னை மூவர் கற்பழித்ததாக கூறிய அன்று இரவு, அந்த பெண் முழுமனதோடு ஒப்புக்கொண்டு தனது இரு சக ஊழியர்களுடன் உடலுறவு கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டுக்கு செல்ல பணம் இல்லாத காரணத்தினால், தனது உறவினரிடம் பொய் சொல்லி டாக்ஸியை அவர் அங்கு வரவழைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இவரே தவறுகளை செய்துவிட்டு, வேண்டுமென்றே போலீசாரின் நேரத்தை வீணடித்த காரணத்திற்காக அவர் தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதமும் விதிக்க வாய்ப்புகள் உள்ளது.
உலகின் வலிமையான பாஸ்போர்ட் எது?.. இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?