அதிர வைக்கும் கொரோனா... நோய்த்தொறு ஏற்பட்டவர்களை கதிகலங்க வைக்கும் தகவல்..!
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று என்று மருத்துவ உலகம் கூறி வந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு சிலருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று என்று மருத்துவ உலகம் கூறி வந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு சிலருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக உடலில் தோன்றும் ஆன்டிபாடிகள் வெறும் 2 மாதங்கள் வரை மட்டுமே நீடிப்பதாகக் கண்டுபிடித்து இருந்தனர். இந்தத் தன்மை அமெரிக்காவில் லேசான கொரோனா பாதிப்புடைய நபர்களிடம் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் ஒருமுறை கொரோனா போன்ற பெருந்தொற்று பாதித்தவரின் உடலில் அந்நோய்க்கு எதிராக குறிப்பிடத்தக்க ஆன்டிபாடிகள் உடலில் தோன்றியிருக்கும். இதனால் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும் எனப் பொதுவாக நம்பப்பட்டது.
கொரோனா விஷயத்தில் இந்த நம்பிக்கை பொய்த்துப் போனதோடு, கொரோனா பாதித்து குறைந்தது 3 மாதத்தில் இருந்து 1 ஆண்டிற்குள் அடுத்த பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பாஸ்டன் பல்கலைக் கழகத்தின் உலகச் பொது சுகாதார திட்ட இயக்குநர் பிலிப் காண்ட்ரிகன் தெரிவித்து உள்ளார். இதில் ஒரே ஒரு நல்ல விஷயமாக இரண்டாவது முறை கொரோனா பாதித்த நபர், மற்றவர்களுக்கு அந்நோயை பரப்புவதில்லை எனவும் கண்டறியப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததில் இருந்தே அதன் மரபணு, அறிகுறி, உடல் பாதிப்பு போன்ற பல்வேறு தன்மைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகளும் பெரிய அளவிற்கு விஞ்ஞானிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. குறைந்த நாட்களிலேயே ஆன்டிபாடிகள் குறைந்து நோய்க்கு எதிரான ஆற்றலை இழந்து விடுகிறது. மேலும் 1 ஆண்டுவரை நோய் பாதிப்பு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.