ரோபோக்கள் கார்களை உருவாக்குகிறது… வீடுகளை சுத்தம் செய்கிறது… நமக்கு விருப்பமான உணவுகளை தயாரித்து தருகிறது… இது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.  ரோபோக்களால் மனிதர்களைப் போன்று படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அடுத்த 10 ஆண்டுகளில் மனிதர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள ரோபோக்கள் தயாராகிவிடும் என்பதே உண்மை. Sex Androids  என்று அழைக்கப்படும் இந்த அழகிய Moving Dolls  உடலுறவு பிரச்சனையில் மனிதர்களுக்கு மாற்றாக சக மனிதனின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்க உள்ளன.


இன்றும் 10 ஆண்டுகளில் மனித உருவத்தை கொண்ட அழகிய ரோபோக்கள் சாதாரணமாக வீடுகிளுக்கு புழக்கத்திற்கு வந்துவிடும் என்கிறார் இது குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் Ian Pearson.

2025  ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் ரோபோக்களுடன் உறவு கொள்ள அதிகம் விரும்புவார்கள் என்றும், விபசார விடுதிகள், கிளப்புகள் போன்றவை ரோபோக்களை வைத்து செக்ஸ் பிசினஸ் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதே இது போன்ற செக்ஸ் ரோபோக்களை நிறைய தொலைக்காட்சி சேனல்களிலும், நாடங்களிலும் இயக்குனர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
மனித உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றார்போல் செயல்படும் இந்த செக்ஸ் ரோபோக்களை மனிதர்கள் பயன்படுத்த தொடங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே கூறலாம்.

இந்த செக்ஸ் ரோபோக்களை தயாரிக்க முன்பு 6000 டாலர்கள் வரை செலவான நிலையில் தற்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பம் இந்த செலவை வெகுவாக குறைத்துள்ளது.

செக்ஸ் ரோபோக்கள் குறித்து கூறும் விஞ்ஞானிகள், மனிதர்கள் இந்த ரோபோக்களுடன் பிடிக்கும் வரை வாழலாம், இல்லை என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு புதிய ஒன்றை வாங்கி புது வாழ்க்கையை தொடங்கலாம் என்கின்றனர். குடும்பம், குழந்தைகள், விவாகரத்து போன்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் செக்ஸ் ரோபோக்களுடன் குடும்பம் நடத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படுக்கை அறைகளில் சக பார்ட்னரின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ரோபோக்களின் சிறப்பு அம்சங்கள்.

தற்போது உலகின் பொரிய நிறுவனங்கள் செக்ஸ் ரோபோக்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த True Companion  என்ற நிறுவனம், உங்கள் மனைவி அல்லது பெண் நண்பருக்கு சரியான மாற்று எங்கள் நிறுவனம் தயாரித்து அளிக்கும் செக்ஸ் ரோபோக்கள்தான் என விளம்பரம் செய்து வருகின்றன. இந்த பெண் ரோபோக்களுக்கு அந்நிறுவனம் Roxxxy  என பெயரிட்டுள்ளது.
தற்போது இந்த நிறுவனத்திடம் 4000 பேர் செக்ஸ் ரோபோக்கள் செய்ய ஆர்டம் கொடுத்துள்ளதாகவும், 20000 பேர் இவற்றை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே போன்று பெண்களுக்கான ஆண் செக்ஸ் ரோபோக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு Rockey  என பெயரிடப்பட்டுள்ளது. இது போன்ற செக்ஸ் ரோபோக்கள் அடுத்த 10 ஆண்டுகளில் சாதாரணமாக புழக்கத்தில் வந்துவிடும் என விஞ்ஞானிகள் உறுதியான தெரிவிக்கின்றனர்.

உலகம் தெர்ழில் நுட்பத்தில் உயர, உயர மனித உணர்வுகள் மங்கிப்போய் வருகின்றன. அன்பான கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப உறவுகள் இது போன்ற செக்ஸ் ரோபோக்களால் சிதைந்துவிடும்.

ஒருவருக்கொருவர் பேசிஇ சிரித்து மகிழ்ந்து இருப்தைப் போன்ற இனிய குடும்ப வாழ்க்கை இதில் இல்லை. இயந்திரங்களுடன் இயந்திர வாழ்க்கை வாழ முடியுமே தவிர அன்பான மேன்மையாக வாழ்க்கை அற்றுப்போய்விடும் என்பதே உண்மை.

ஆனாலும் இனி வரும் காலங்களில் ரோபோக்களுடனான செக்ஸ் வாழ்க்கை அதிகரிக்கும் என ஆரூடம் சொல்கின்றனர் விஞ்ஞானிகள்.