ராணுவத்தை விமர்சனம் செய்த செய்தியாளர் ! சரமாரியாக வெட்டிக் கொலை !!

பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர்  மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

reporter killed in pakistan

பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் முகமது பிலால் கான். இவருக்கு டுவிட்டரில் 16,000 பாலோயர்களும், யூடியூப், பேஸ்புக்கில் 22,000 பாலோயர்களும் உள்ளனர்.

முகமது பிலால் கான் தொடர்ந்து பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறையை விமர்சனம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் தனது  நண்பருடன் வெளியே சென்றிருந்த போது அவரை மர்மநபர் வெட்டிக்கொலை செய்துள்ளார். 

அவருடைய நண்பருக்கும் தாக்குதலில் காயம் நேரிட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டதை அடுத்து #Justice4MuhammadBilalKhan என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டர் வாசிகள் நியாயம் கோரி வருகின்றனர். இது சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. 

ராணுவத்தையும், உளவுத்துறையையும் விமர்சனம் செய்ததால் அவர் கொல்லப்பட்டுள்ளார் என டுவிட்டர் வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios