Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் முதல் அரச குடும்ப பலி..! ஸ்பெயின் இளவரசி மரணம்..!

கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமை சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலையில் காலமானார்.

Princess Maria Teresa of Spain becomes first royal to die from COVID-19
Author
Spain, First Published Mar 29, 2020, 11:17 AM IST

உலக அளவில் கொரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 31 ஆயிரத்தை கொரோனா பலி நெருங்கி கொண்டிருக்கிறது. 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

nn

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டு இளவரசி மரிய தெரசா(86) உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமை சிகிச்சையில் இருந்த அவர் காலமானார். இதை அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான முதல் அரச குடும்பத்தையைச் சேர்ந்தவராக மரிய தெரசா அறியப்பட்டுள்ளார். ஸ்பெயினில் கொரோனாவால் 5,812 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அங்கு 674 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios