இளம் பெண்ணுக்கு அதிபர் கொடுத்த "லிப்கிஸ்"..! இந்த வீடியோவை நீங்களே பாருங்க..!
பொது மேடையில் பெண் ஒருவருக்கு அதிபர் கொடுத்த லிப் டூ லிப் முத்தத்தால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது.
தென் கொரியாவுக்கு அரசுப்முறை பயணமாக சென்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே, அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர், அதில் பங்கேற்ற ஏராளமான பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடேயே உரையாற்றினார்
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, தம்மிடம் முத்தம் வாங்கும் பெண்ணுக்கு, தாம் இலவசமாக புத்தகம் தருவதாக அதிபர் ரொட்ரிகோ கூறினார்
இதனை தொடர்ந்து, சவாலை ஏற்று மேடைக்கு வந்த பெண், அதிபரை பார்த்து கொஞ்சம் நேரம் தயங்கி தயங்கி பின்னர் எப்படியோ ஓகே சொல்ல, அதிபர் அந்த பெண்ணின் அருகாமையில் வந்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்து உள்ளார்.
இந்த சம்பவம் தென் கொரியா மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடேயே பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது