செக்ஸ் உறவு என்பது நான்கு சுவற்றுக்குள் ஆண்,பெண் என இருவரின் ஒப்புதலில் நடக்கக் கூடியது. பொது இடத்தில் செக்ஸ் என்பது உலகம் முழுவதும் உள்ள தடை செய்யப்பட்டுள்ளது. அது அநாகரீகமான செயலும் கூட. எனவே மிருகங்களைப் போல பொது இடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது என்பது மனித மாண்புக்கு உகந்ததல்ல.

அமெரிக்காவை ஒட்டிய நாடான மெக்சிகோவின்  மேற்கு பகுதியில் உள்ள கவுதலஜாரா நகரில் உள்ள பூங்கா ஒன்றில் சமீபத்தில் தனிமையில் செக்ஸில் ஈடுபட்ட காதல் ஜோடி  ஒன்றை போலீசாரால் துரத்தி அடிக்கப்பட்டனர். இது அந் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து  பொது இடங்களில் செக்ஸ் உறவு கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என கவுன்சிலர் ஒருவர் நகர சபையில் முறையிட்டார்.

இதனை அடுத்து, அடுத்தவர் தொல்லைக்கு உள்ளாவதாக புகார் தெரிவிக்கும் வரை பொது இடங்களில் செக்ஸ் உறவில் ஈடுபடும் ஜோடிகளை போலீசார் எந்தத் தொந்தரவும் செய்ய கூடாது என கவுதலஜாரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.