Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவுடன் விபச்சாரம், சீனா செய்த பயங்கரம், உலகநாடுகளை கதிகலங்க வைத்த அதிபர்...!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் சீன பெண்களை வைத்து சீனர்கள் நடத்தும் உல்லாச விடுதிகள் பெருகி விட்டது எனவும் அதனால் தங்களது நாட்டில் விபச்சாரம் மலிந்து விட்டது எனவும் அந்நாட்டு அதிபர் ஆதங்கம் தெரிவித்துள்ளார் .

Philippians president  accused china regarding leisure hotels increasing in Philippians  compare with corona virus
Author
Delhi, First Published Jan 29, 2020, 2:38 PM IST

கொரோனா வைரஸை சீனா பரப்புவதை போல விபச்சாரத்தையும் பரப்புவதாக பிலிப்பைன்ஸ் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது . கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிலிப்பைன்ஸின் இந்த குற்றச்சாட்டு சீனாவை மேலும்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான் நகரத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தாக்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது .பின்னர் அந்த வைரஸ் ஒவ்வொரு  நகரமாக பரவி சீனாவில் மிகப்பெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது .  இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

Philippians president  accused china regarding leisure hotels increasing in Philippians  compare with corona virus

106 பேர் இந்த வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் ,  இந்நிலையில் எல்லா நாடுகளும் அந்தந்த நாட்டின் விமான நிலையங்களில் சீனர்களை கண்காணிக்க மருத்துவக் குழுக்களை அமைத்துள்ளனர் .  குறிப்பாக சீன நாட்டினர் தங்களது நாட்டிற்கு வர தடை விதித்து விசா வழங்குவதையும் நிறுத்தியுள்ளது.  எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனா இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது .  எதையுமே சவாலாக எடுத்து சாதிக்கக்கூடிய  சீன அதிபர்  இந்த வைரஸை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என கை விடுத்துள்ளார்.  அவரின் நம்பிக்கை இழந்த பேச்சு  சர்வதேச அளவில் சீனாவை பரிதாபமாகபார்க்கவைத்துள்ளது .  

Philippians president  accused china regarding leisure hotels increasing in Philippians  compare with corona virus

இந்நிலையில் இலங்கை,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சீனர்கள்  தங்களது நாட்டிற்கு வர  தடை விதித்துள்ளது.  இந்நிலையில் பிலிப்பைன்ஸ் சீனாவுக்கு எதிராக பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது ,   அதாவது பிலிப்பைன்ஸ் நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் சீன பெண்களை வைத்து சீனர்கள் நடத்தும் உல்லாச விடுதிகள் பெருகி விட்டது எனவும் அதனால் தங்களது நாட்டில் விபச்சாரம் மலிந்து விட்டது எனவும் அந்நாட்டு அதிபர் ஆதங்கம் தெரிவித்துள்ளார் . அதுமட்டுமல்லாமல்  கொரோனா வைரஸை சீனா எல்லா நாடுகளுக்கும்  பரப்புவதை போல ,  விபச்சாரத்தையும் பரப்புகிறது என அவர் சீனாவை கடுமையாக தாக்கியுள்ளார் ஏற்கனவே வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனா பிலிப்பைன்ஸின் குற்றச்சாட்டால் மிகுந்த காயம் அடைந்து உள்ளது குறிப்பிடதக்கது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios