விடுதியில், அறிமுகமில்லாத பெண்ணுடன் செக்ஸ் வைத்த என்ஜினீயர்..!! நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்..!!

நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது, அதில் உடலுறவு வைத்துக் கொள்வது சகஜமான ஒன்றுதான்,  குளிப்பது மற்றும்  பசித்தால் சாப்பிடுவது போன்ற ஒன்று, என விளக்கமும் கொடுத்தது. ஆனால் அந்த விளக்கத்தையும் ஏற்க மறுத்த அந்நிறுவனம் சுகாதாரத்துறையை எதிர்த்து அதே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது

paris court gave new order to victim, in on site employee death case

அலுவல் நிமித்தமாக வெளியூர்  சென்று உடலுறவில் ஈடுபட்டு மரணமடைந்த  ஊழியருக்கு தொழிற்சாலை விபத்தாக கருதி அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என  பாரிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

paris court gave new order to victim, in on site employee death case

சேவியர் எக்ஸ் என்ற நபர், (டிஎஸ்ஒ) என்ற பாரிஸைச் சேர்ந்த ரயில்வே சேவை நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.  இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய பிரான்ஸ் பகுதிக்கு அலுவல் நிமித்தமாக பயணம் சென்றிருந்தார், அப்போது அவர் தங்கியிருந்த விடுதியில் அவருக்கு கொஞ்சமும்  அறிமுகமில்லாத ஒரு பெண்ணுடன் அவர் உடலுறவில் ஈடுபட்டார்.  அப்போது  திடீரென்று அவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டு  அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் வெறொரு பெண்ணின்  அறையில் இருந்ததை சுட்டிக்காட்டிய அவரது நிறுவனம், அவருக்கு இழப்பீடு ஏதும் வழங்க  முடியாது என மறுத்துவிட்டது. 

paris court gave new order to victim, in on site employee death case

நிறுவனத்தில் முடிவை எதிர்த்த அவரது மனைவி, அலுவல் நிமித்தமாகத்தான்  தன் கணவர் வெளியூர் பயணம் மேற்கொண்டார்.  பணி நிமித்தமாக சென்ற பணத்தில்  அவர் உயிரிழந்ததற்கு அலுவலகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறி  தனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும் என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதே நேரத்தில், அவரது மனைவிக்கு ஆதரவாக களமிறங்கிய மாநில சுகாதார காப்பீட்டு நிறுவனம்.  இறந்தவரின் குடும்பத்திற்கு  உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு அந் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது, அதில் உடலுறவு வைத்துக் கொள்வது சகஜமான ஒன்றுதான்,  குளிப்பது மற்றும்  பசித்தால் சாப்பிடுவது போன்ற ஒன்று, என விளக்கமும் கொடுத்தது. ஆனால் அந்த விளக்கத்தையும் ஏற்க மறுத்த அந்நிறுவனம் சுகாதாரத்துறையை எதிர்த்து அதே நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தது

 paris court gave new order to victim, in on site employee death case

இவ் இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி விசாரித்த நீதிமன்றம்  முடிவில் அரசு சுகாதாரத்துறை  காப்பீட்டு நிறுவனம் கூறிய அதே கருத்தையே உத்தரவாக தெரிவித்தது. அத்துடன், அலுவல் நிமித்தமாக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் ஊழியருக்கு ஏற்படும் பாதிப்பு அல்லது மரணத்திற்கு அவர் பணியாற்றும்  நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், அவரது மரணத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடதக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios