மசூதி அருகே குண்டுவெடிப்பு... 10 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!
பாகிஸ்தானின் லாகூர் மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் 2-வது பெரிய நகரமான லாகூர் நகர் கிழக்கு பகுதியில் உலகப்புகழ் பெற்ற டேட்டா தர்பார் மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தொழுகை செய்வதற்கு வசதி உள்ளது. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இந்த மசூதியில் பெண்களும் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கும் காலம் நேற்று தொடங்கியது. இன்று அதிகாலை 2-வது நாளாக ரம்ஜான் நோன்பு தொழுகைகள் அந்த டேட்டா தர்பார் மசூதியில் நடைபெற்றது. இந்த மசூதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஆனால் அதையும் மீறி இன்று காலை 8.45 மணிக்கு அந்த மசூதி முன்பு 2-ம் எண் கேட் அருகே குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.