இந்தியாவின் மீது வெறுப்பை விதைக்க படுபயங்கரம்... பாகிஸ்தான் எடுத்த படுபாதகச் செயல்...!
கொடுமையாக தாக்கப்பட்ட முகத்தில் ரத்தம் வழியும் பெண்களின் புகைப்படங்களை இந்தியாவின் பெயரை கெடுக்கும் வகையில் பொய் செய்தியை பரப்பி பாகிஸ்தான் பிரச்சாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொடுமையாக தாக்கப்பட்ட முகத்தில் ரத்தம் வழியும் பெண்களின் புகைப்படங்களை இந்தியாவின் பெயரை கெடுக்கும் வகையில் பொய் செய்தியை பரப்பி பாகிஸ்தான் பிரச்சாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ததால் பாகிஸ்தான் இந்தியா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பல்வேறு வகைகளில் முயற்சித்தும் தோல்வி அடைந்து வருகிறது. பல்வேறு நாடுகளை உதவிக்கு அழைத்தும் பாகிஸ்தானின் எண்ணங்கள் பலிக்கவில்லை.
இதனால் அந்நாட்டு அமைச்சர்களும், பிரதமரும் இந்தியாவுக்கு எதிராக விஷமத் தனமான கருத்துக்களை கூறி வெறுப்பேற்றி வருகின்றனர். இன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இம்ரான் கான் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் எல்லோரும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு இந்திய எல்லைப்பகுதிக்கு செல்லுங்கள் என வன்மத்தை தூண்டும் வகையில் அவர் பேசினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் மக்களை இந்தியாவுக்கு எதிராக வெறுப்பேற்றும் செயலில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து ட்விட்டர் பக்கத்தில் சமீபமகாலமாக ஒரு புகைப்படம் பாகிஸ்தானில் வைரலாகி வருகிறது. அந்தப்புகைப்படம் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரின் தலை, நெற்றி மற்றும் கண்களிலிருந்து ரத்தம் வடியும் புகைப்படம் காண்பவர்களின் கண்களை ஒரு கணம் கலங்கடித்து வருகிறது.
#KashmirBleeds_World sleeps என்ற ஹேஸ்டேக்குடன், ஜம்மு -காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தையும், அம்மாநில மக்கள் மீதான இந்திய பாதுகாப்புப் படையின் அடக்குமுறையையும் இந்த உலகம் அறிய, இது ஒன்றே போதும் என்ற விளக்கத்துடன் வெளியிடப்பட்ட அப்புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது.
ஆனால் இந்தப்புகைப்படம் இந்தியாவின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் பாகிஸ்தானியர்களால் ட்விட்டரில் பதிவிடப்பட்ட இப்புகைப்படம் எனத் தெரிய வந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது எடுக்கப்பட்டது. அப்போரின்போது அப்பாவி மக்களை குறிவைத்து, கண்மூடித்தனமாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜம்மு - காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் பரப்பியது தெரிய வந்துள்ளது.