பாகிஸ்தானில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். 

இது தொடர்பாக உடனே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படை வீரர்கள் மசூதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக அமைதி காத்து வந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தற்போது குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி வருகிறது.