மனைவியை போட்டுத் தள்ளிய அமைச்சர் ! குடும்பத் தகராறில் விபரீதம் !!
குடும்பத்தகராறில் சொந்த மனைவியை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு பாகிஸ்தான் அமைச்சர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹசர்கான் பைஜரானி. இவர் சிந்து மாகாணத்தின் அமைச்சராகவும் இருக்கிறார். , இவரது மனைவி பரிதா ரஸாக், பத்திரிகை நிருபராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று கராச்சியில் உள்ள அவர்களது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ஹசர்கான் பைஜரானி, பரிதா ரஸாக் ஆகிய இருவரும் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பைஜரானி முதலில் மனைவியை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு பின்னர் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த விபரீதம் நடந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். நீண்ட நாட்களாக அமைச்சருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும், தற்போது அமைச்சர் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாவும் தெரிகிறது.