ஃபேஸ்புக்கில் நட்பாகி சிறுமியை கற்பழித்த டாக்டர்! பல பெண்களை செக்ஸ் வீடியோசாட் செய்து மயக்கிய கொடுமை!

Oklahoma doctor arrested at DFW Airport on child sex charges
Oklahoma doctor arrested at DFW Airport on child sex charges


சமூகவலைதளம் மூலம் நட்பாகி, காதலிப்பதாக கூறி செக்ஸ் வீடியோ சாட் செய்து சிறுமியை கற்பழித்த  காமக் கொடூர டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏஞ்சலோ டிரிகோஸா ஜாரா என்பவர் ஒகலகோமா மாநிலத்தில் பிரபல மருத்துவமணையில் தலைமை டாக்டராக  இருக்கிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடன் பயின்ற சக மருத்துவ மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் எப்போதுமே இளம் பெண்களை தனது காதல் வலையில் சிக்கவைப்பாராம். அடுத்ததாக அவர்களுடன் செக்ஸ் வீடியோ சாட் செய்துவந்துள்ளார். இப்படி இணையதளம் வாயிலாக புளோரிடாவில உள்ள 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் அந்த டாக்டர்.

இந்நிலையில், அந்த சிறுமியிடம் தனக்கு வயது 23 என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். அதன்பின்னர் ஸ்னாப்சாட் மூலம் பல மணிநேரம் உரையாடியுள்ளனர். நாட்கள் செல்ல ஆபாசமான புகைப்படங்களை சிறுமிக்கு அனுப்பியுள்ளார். அடுத்தகட்டமாக அந்த பெண்ணுடன் பேசி செக்ஸ் வீடியோ சாட் செய்துள்ளார். இப்படியே எல்லை மீறிப்போன இவர்கள். இதனையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி ப்ளோரிடாவுக்கு சென்ற இந்த டாக்டர், சிறுமியின் வீட்டிற்குச் சென்று சிறுமியை அழைத்துக்கொண்டு, ஹொட்டல் ஒன்றில் வைத்து அவரை கற்பழித்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து திரும்பிய பின்னரும் இவர் தனது உரையாடலை தொடர்ந்து கொண்டு தான் இருந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் மீண்டு பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் வரவே புளோரிடா பயணிக்கையில் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்யப்பட்டார். இவர்கள் உறவு குறித்து அறிந்து கொண்ட தாய், அளித்த புகாரின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது சட்டவிரோதமான பாலியல் செயல் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அந்த டாக்டருக்கு எதிராக அடுக்கடுக்கான செக்ஸ் குற்றச்சாட்டு புகார்கள் குவிவதால்  விசாரணை நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து  விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios