2018 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வில்லியம் டி நார்தவுஸ், பால் எம்.ரோமர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 2018 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இயற்பியலுக்கான நோபல் பரிசும், வேதியியலுக்கான நோபல் பரிசும், அமைதிக்கான நோபல் பரிசும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு காங்கோ நாட்டை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜாவுக்கும், ஈராக்கின் குர்தீஷ் இனத்தை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் மற்றும் உள்நாட்டு போரின் போது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகிய 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்விற்காக இவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பருவநிலை மாற்றத்தை பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தி செய்த ஆய்வுகளுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
பொருளாதார ஆய்வு, சுற்றுச்சூழல் மாற்றத்தையும் இணைக்கும் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு உதவும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்காக ரோமருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.